நெருக்கமான படங்களை வெளியிடுவதாக நடிகையை மிரட்டிய முன்னாள் காதலன் - தற்கொலை வழக்கில் திருப்பம்

நெருக்கமான படங்களை வெளியிடுவதாக நடிகையை முன்னாள் காதலன் மிரட்டியதாக வைஷாலியின் நெருங்கிய நண்பரான நிஷாந்த் சிங் மல்கானி என்பவர் வெளிப்படுத்தி உள்ளார்.;

Update: 2022-10-27 02:39 GMT

மத்திய பிரதேச மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக விளங்கிய வைஷாலி தாக்கருக்கு சமீபத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பானது. முன்னாள் காதலன் தன்னை துன்புறுத்தியதாக வைஷாலி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். முன்னாள் காதலன் ராகுல் என்பதும், அவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. வைஷாலி தூக்கில் தொங்கியதும் தப்பி ஓடிய ராகுலை பல்வேறு இடங்களில் தேடி போலீசார் கைது செய்தனர். அவரது மனைவி தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் தற்கொலைக்கான காரணத்தை வைஷாலியின் நெருங்கிய நண்பரான நிஷாந்த் சிங் மல்கானி என்பவர் வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது, ''வைஷாலியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி ராகுல் மிரட்டி உள்ளார். உனக்கு திருமணமானதும் என்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களை உனது கணவரிடம் காட்டுவேன் என்று கூறி உள்ளார். வைஷாலியை எங்கேயும் நகரவிடமால் சித்ரவதை செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வைஷாலி உயிரை மாய்த்துள்ளார்" என்றார். இது பரபரப்பாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்