நிலநடுக்க உயிர்ப்பலிகள்: கவிஞர் வைரமுத்து வேதனை

துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் வேதனையை தெரிவித்து உள்ளார்.

Update: 2023-02-09 04:04 GMT

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் இடிந்து தரைமட்டம் ஆகின. அதன் அண்டை நாடான சிரியாவிலும் நிலநடுக்க பாதிப்புகள் கடுமையாக இருந்தன. துருக்கியில் கட்டிட இடிபாடுகளை தோண்ட தோண்ட பிணக் குவியல்களாக உள்ளன.

இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு நாடுகளுமே நிலநடுக்கத்தினால் உருக்குலைந்து போய் உள்ளன. உலக நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்பி உதவி வருகின்றன.

துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் வேதனையை தெரிவித்து உள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கவிதையில், ''துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது.... ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன... வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன.. மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன.. மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன்.. உலக நாடுகள் ஓடி வரட்டும்.. கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்..'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்