'தி கோட்' படத்தில் விஜயகாந்துக்கு டப்பிங் கொடுத்தது யார் தெரியுமா?

நடிகர் மணிகண்டன் ‘தி கோட்’ படத்தில் விஜயகாந்துக்கு டப்பிங் பேசியுள்ளார்.

Update: 2024-09-09 15:17 GMT

சென்னை,

லியோவுக்குப் பிறகு விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'தி கோட்'. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோட் படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 5ம் தேதி 4,000 திரைகளில் வெளியானது.

இப்படத்தில் மறைந்த விஜயகாந்த் முகத்தை ஏஐ தொழிநுட்பம் மூலம் பயன்படுத்தி நடிக்க வைத்துள்ளனர். அதிலும் படத்தின் தொடக்கத்திலேயே கேப்டன் விஜயகாந்தை காட்டியது திரையரங்கையே அதிர வைத்தது. கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சிகள் சில நிமிடங்களாக இருந்தாலும் அந்தக் காட்சியை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்நிலையில் கோட் படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட விஜயகாந்துக்கு டப்பிங் கொடுத்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் விஜயகாந்துக்கு டப்பிங் பேசியுள்ளார்.

நடிகர் மணிகண்டன் ஏற்கனவே பல நடிகர்களை போல் மிமிக்ரி செய்யும் திறமை உடையவர். அதிலும் கேப்டன் விஜயகாந்தின் குரலை மிகவும் தத்ரூபமாக கொண்டு வந்திருந்தார் மணிகண்டன். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் நடிகர் மணிகண்டனை பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்