'கல்கி 2898 ஏடி': முதல் பாதி மெதுவாக இருக்கிறதா? - கருத்து தெரிவித்த நாக் அஸ்வின்
’கல்கி 2898 ஏடி’ படத்தின் முதல் பாதி மெதுவாக இருப்பது குறித்து நாக் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், 'கல்கி 2898'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கமல்ஹாசனின் தோற்றமும் பெரிதும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
இப்படம் ரூ.1,000 கோடி வசூலை நெருங்கி வருகிறது. முன்னதாக இப்படத்தின் முதல் பாதி மெதுவாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இதற்கு இயக்குனர் நாக் அஸ்வின் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'இது இலகம் முழுவதும் உள்ள ஒரு பொதுவான பார்வைதான். 3 மணி நேர படத்தில் மக்கள் முதல் பாதி மெதுவாக இருக்கிறது என்று நினைத்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன்,' என்றார்.