டிஜிட்டலில் புதுப்பித்து ரஜினியின் 'பாபா' படம் மீண்டும் ரிலீஸ்

‘பாபா’ படம் புதிய கோணத்தில் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2022-11-22 09:17 GMT

ரஜினிகாந்த் நடித்து 2002-ல் திரைக்கு வந்த படம் பாபா. இந்த படத்துக்கு ரஜினியே கதை, திரைக்கதை எழுதி தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக பாபா படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கதாநாயகியாக மனிஷா கொய்ராலா மற்றும் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஷ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

பாபாஜியை மையமாக கொண்டு படம் தயாராகி இருந்தது. படத்தில் ரஜினி அடிக்கடி காட்டும் பாபா முத்திரை அவருக்கான தனி அடையாளமாகவே மாறியது. இந்த படத்தை தற்போது நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பித்துள்ளனர். புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிரேடிங்கும் செய்யப்பட்டு உள்ளது. பாடல்களும் புதிதாக ரீமிக்ஸ் செய்து டால்பி மிக்ஸ் ஒலிக்கு மாற்றி உள்ளனர்.

 

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டுள்ள பாபா படம் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையிடப்பட உள்ளது என்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்