ஆஸ்கார் விருதை வெல்ல டைரக்டர் ராஜமவுலி ரூ.83 கோடி செலவா?

Update: 2023-03-07 03:43 GMT

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர் ஆர் ஆர் படம் கடந்த வருடம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி வசூல் குவித்தது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருது விழாவிலும் ஐந்து விருதுகளை பெற்றது.

ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்று உள்ளது. டைரக்டர் ராஜமவுலி கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் முகாமிட்டு ஆஸ்கார் விருதை வென்று விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். ஆர் ஆர் ஆர் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்கிறார். அங்குள்ள தியேட்டர்களில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு படத்தை திரையிட்டு காட்டி வருகிறார்.

இதற்காக தனி குழுவை நியமித்து உள்ளனர். ஆஸ்கார் விருது விளம்பர செலவாக இதுவரை ரூ.83 கோடியை ராஜமவுலி செலவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர் ஆர் ஆர் படத்தில் ராஜமவுலி ரூ.300 கோடி வரை சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இந்த படம் மூலம் ஹாலிவுட்டில் பிரபலமாக வேண்டும் என்பது அவரது திட்டமாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்