'தேவரா': 'தாவுடி' பாடல் திரையிடப்படாதது ஏன்?- ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம்

'தாவுடி' பாடல், படம் வெளியான முதல் வாரத்தில் திரையிடப்படவில்லை.;

Update:2024-10-07 12:28 IST

சென்னை,

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் 'தேவரா பாகம்-1''. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார்.

கடந்த மாதம் 27-ம் தேதி வெளியான இப்படம் தற்போதுவரை ரூ. 450 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில், மிகவும் ரசிக்கப்பட்ட பாடல்களில் ஒன்று தாவுடி.

ஆனால், இப்பாடல் முதல் வாரத்தில் திரையிடப்படவில்லை. பின்னர் ரசிகர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து சேர்க்கப்பட்டது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் 'தாவுடி' பாடல் படத்திலிருந்து நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து ஜூனியர் என்.டி.ஆர் பேசியுள்ளார்.

அதன்படி, தாவுடி பாடலானது கதையின் ஓட்டத்தை சீர்குலைக்கும் வகையில் இருந்ததாகவும் இதனால் அதை நீக்க முடிவு செய்ததாகவும் கூறினார். பின்னர் ரசிகர்களை திருப்திப்படுத்த அதை சேர்க்க முடிவு செய்ததையும் வெளிப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்