தாமதமாகும் படப்பிடிப்பு.... விடுதலை 2ம் பாகம் வெளியாவதில் சிக்கல்...!

விடுதலை 2ம் பாகம் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-11-05 16:05 GMT

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விடுதலை பாகம் 1'. இந்த படம் கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர்.

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் இடம்பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தது. இந்த படம் 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் விடுதலை 2ம் பாகம் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் பாகத்திற்கான பெரும்பான்மையான காட்சிகளின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு தாமதமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு மேல் தான் இரண்டாம் பாகம் வௌியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்