திருவண்ணாமலை கோவிலில் மகன்களுடன் தனுஷ் சாமி தரிசனம்

திருவண்ணாமலை கோவிலுக்கு தனுஷ் வந்த தகவலை தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் கோவிலில் திரண்டனர்.;

Update:2024-07-29 21:37 IST

திருவண்ணாமலை,

தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் கடந்த 27-ம் தேதி திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப்படம் தனுஷ் நடிக்கும் 50-வது படமாகும். படத்தில் பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாச் ஜெயராம், துசரா விஜயன், சந்திப் கிஷன் உள்பட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், தனுஷ் தனது 41-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி போயஸ்கார்டனில் உள்ள் அவரது வீட்டு முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியே வந்து தனுஷ் ரசிகர்களை சந்தித்தார். அவர்களுடன் செல்பி எடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்தநிலையில் ஆடி கிருதிகையையொட்டி திருவண்ணாமலை கோவிலில் இன்று தனுஷ் சாமி தரிசனம் செய்தார். தனுஷ் கையில் ருத்ராட்ச மாலையுடன் தரிசனம் செய்தார். பின்னர் வைகுண்ட வாசல் வழியாக வந்து மலையை பார்த்து கும்பிட்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. அவரோடு இரு மகன்களும் கோவிலுக்கு வந்திருந்தனர். திருவண்ணாமலை கோவிலுக்கு தனுஷ் வந்த தகவலை தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் கோவிலில் திரண்டனர்.

இந்நிலையில், இன்று தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- ராயன் படத்தை மாபெரும் வெற்றியடைய செய்து மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்த திரையுலக நண்பர்கள், எனது அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்