தாதா சாகேப் பால்கே விருது வென்ற 'காந்தாரா' நடிகர் ரிஷப் ஷெட்டி..! குவியும் வாழ்த்துகள்
நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.
கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விழா நேற்று (பிப்ரவரி 20) மும்பையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ಈ ಪ್ರೀತಿ, ಪುರಸ್ಕಾರಕ್ಕೆ ನಾನು ಸದಾ ಚಿರಋಣಿ. ದಾದಾಸಾಹೇಬ್ ಫಾಲ್ಕೆ ಪ್ರಶಸ್ತಿ ಸಿಕ್ಕಿರುವುದು ನನಗೆ ಇನ್ನಷ್ಟು ಸಿನೆಮಾ ಮಾಡುವ,ನನ್ನ ಜವಾಬ್ದಾರಿಯನ್ನು ಹೆಚ್ಚಿಸಿದೆ. pic.twitter.com/dUOmpKdxnK
— Rishab Shetty (@shetty_rishab) February 20, 2023