பட வாய்ப்புகளுக்கு அழகு முக்கியம் இல்லை - நடிகை ராதிகா ஆப்தே
நடிகைகள் சினிமா துறையில் வாய்ப்புகள் வரவேண்டும் என்றால் உடல் அழகு முக்கியம் அல்ல என்று சொல்லிக்கொண்டே சர்ஜரி செய்து கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் நடிகை ராதிகா ஆப்தே,;
தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், "சினிமா துறையில் நிலைத்து இருக்க உடல் அழகு முக்கியம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். இதனாலேயே பலர் அழகாக இருப்பதற்காக சர்ஜரிகள் செய்து கொள்கின்றனர். எனக்கு தெரிந்த எத்தனையோ நடிகைகள் சினிமா துறையில் வாய்ப்புகள் வரவேண்டும் என்றால் உடல் அழகு முக்கியம் அல்ல என்று சொல்லிக்கொண்டே சர்ஜரி செய்து கொண்டவர்கள் இருக்கிறார்கள்.
எனது பார்வையில் சினிமா வாய்ப்புகளுக்கு அழகு முக்கியம் இல்லை. நடிப்பு ஒரு தொழில். அந்த தொழிலை செய்வது வரை சினிமாவோடு பயணம் செய்வேன். அதன் பிறகு சினிமா என்கிற பேச்சையே சொந்த வாழ்க்கையில் கொண்டு வரமாட்டேன் சில கதாநாயகிகள் மணிக்கணக்காக அரட்டை அடிப்பது, தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசுவது அடுத்தவர்களிடம் தற்பெருமை அடித்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன். எனக்கு அது சுத்தமாக பிடிக்காது. ரஜினி சார் ஒரு படத்தில் சொல்வது போல என் வழி தனி வழி'' என்றார்.