போண்டா மணிக்கு கூடவே இருந்து குழிபறித்த நபர்.. சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை அபேஸ் செய்த கொடூரம்

Update:2022-10-07 12:04 IST

சென்னை:

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி தன் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஏழ்மையில் தவித்த அவருக்கு சிகிச்சை செய்ய உதவுமாறு நடிகர் பெஞ்சமின் சமீபத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று பல திரையுலக நட்சத்திரங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என உதவி செய்து வந்தனர்.

இந்திநலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடித்து ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது போண்டா மணிக்கு மருந்துகள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுயடுத்து போண்டா மணியின் மனைவி தேவியிடம் ஏடிஎம் கார்டை பெற்றுச்சென்ற ராஜேஷ் பிரித்தீவ் திரும்பி வரவில்லை.

மேலும் ஏடிஎம் கார்டில் ஒரு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போரூர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சத்தை சுருட்டிய ராஜேஷ் பிரித்தீவ்வை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்