பூஜா ஹெக்டே பகிர்ந்த அரபிக்குத்து வீடியோ - இணையத்தில் வைரல்

'பீஸ்ட்' படப்பிடிப்பில் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை நடிகை பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார்.;

Update:2023-02-16 21:41 IST

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான பீஸ்ட் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி திரையரங்கில் வெளியானது. அதிரடி, காமெடி கலந்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது. அதில் இடம் பெற்ற விஜயின் நடனம், காட்சியமைப்பு ஆகியவற்றால் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜொனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் 500 மில்லியன் பார்வைகளுக்கு மேல் கடந்துள்ளது. இதையடுத்து இப்பாடல் வெளியாகி ஓராண்டு ஆனதை நினைவு கூர்ந்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டது.

இந்த நிலையில், 'பீஸ்ட்' படப்பிடிப்பில் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை நடிகை பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார். இந்த பாடல் வெளியாகி நேற்றுடன் ஓராண்டு முடிந்ததை நினைவுக்கூர்ந்துள்ள பூஜா ஹெக்டே, படத்தில் இடம்பெறாத சில நடன காட்சியை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்