பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியான அனுபமா…. போஸ்டருடன் அறிவித்த 'டிராகன்' படக்குழு

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் டிராகன் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகி உள்ளது.

Update: 2024-10-12 16:14 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் கோமாளி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, கதாநாயகனாக நடித்து 'லவ் டுடே' படத்தை இயக்கினார். இப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருந்து வந்தது.

இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து, கிரீத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, கவுரி கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு 'டிராகன்' என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. லியோன் ஜேம்ஸ் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.

மேலும் இப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது, டிராகன் படத்தின் போஸ்டரை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே இரண்டு போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது மூன்றாவது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் காண்பிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த போஸ்டரின் அனுபமா பரமேஸ்வரன், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தது அனுபமா இந்த படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்