சுதந்திர தினத்தன்று 'அமரன்' பட சிறப்பு போஸ்டர் வெளியீடு!
சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படத்தில் இருந்து புதிய போஸ்டரை ‘அமரன்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சென்னை,
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கலைவண்ணன் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
'அமரன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 14) சுதந்திர தினத்தை ஒட்டி அமரன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இதில் படப்பிடிப்பு பணிகள், சிவகார்த்திகேயனின் ஆக்சன் பயிற்சிகள், சண்டை காட்சிகள் எவ்வாறு எடுக்கப்பட்டன என ஒரு முன்னோட்டமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தற்போது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படத்தில் இருந்து புதிய போஸ்டரை 'அமரன்' படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.