என்னை மனநோயாளி என்பதா ? வீட்டில் புகுந்து தாக்குவேன் - நடிகை கங்கனா எச்சரிக்கை

என்னை மனநோயாளி என்பவர்கள் வீட்டில் புகுந்து தாக்குவேன் என நடிகை கங்கனா வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.;

Update:2023-02-09 10:33 IST

தமிழில் 'தாம்தூம்' படத்தில் நாயகியாகவும், 'தலைவி' படத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக இருக்கிறார். வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார்.

மராட்டிய அரசுடன் மோதினார். இதனால் மும்பையில் உள்ள அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு வீட்டு மாடியிலும், கட்டிடத்திலும், பார்க்கிங்கிலும் 'ஜூம் லென்ஸ்' வைத்து தன்னை யாரோ வேவு பார்ப்பதாக புகார் தெரிவித்து இருந்தார். தன்னை வேவு பார்ப்பவர் அவரது மனைவியை பெரிய நடிகையாக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது கங்கனா வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், ''என்னை பற்றி கவலைப்படுகிறவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். நேற்றிரவு முதல் என்னை சுற்றி சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் எதுவும் இல்லை. யாரும் என்னை பின்தொடரவும் இல்லை. சரியாக இருந்து கொள்ளுங்கள். இல்லையேல் வீட்டுக்குள் புகுந்து உங்களை தாக்குவேன். என்னை மனநோயாளி என்று அழைப்பவர்களுக்கு எதிராக நான் எந்த அளவுக்கு செல்வேன் என்று தெரியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்