கண் கவர் புடவையில் ஆலியா பட் - புகைப்படங்கள் வைரல்

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த ஆண்டின் மெட் காலா 2024 நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2024-05-07 20:06 GMT

image courtecy:instagram@aliaabhatt

மும்பை,

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த ஆண்டின் மெட் காலா 2024 நிகழ்ச்சி நடந்தது. இந்திய திரை உலக பிரபலங்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரபல இந்தி நடிகை ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஆலியாபட் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கண் கவர் புடவையை அணிந்து வலம் வந்தார். அவரது தோற்றம் பார்வையாளர்களை கவர்ந்திழுத்தது.

இந்நிலையில், நடிகை ஆலியா பட் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்த பதிவில், உலகில் புடவையை விட சிறந்த ஆடை எதுவும் இல்லை. இந்த தலைச்சிறந்த படைப்புக்கு பின்னால் இருக்கும் கலைஞர்களுக்கு எனது பாராட்டுக்கள்.இவ்வாறு தெரிவித்தார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களை பார்த்த பலர் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, நடிகை மிருணாள் தாகூர் 'மகாராணி' என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்