சமந்தா, விக்னேஷ் சிவனை தொடர்ந்து பகத் பாசிலை பாராட்டிய நயன்தாரா

ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாளப் படம் 'ஆவேஷம்'.;

Update:2024-04-30 12:59 IST
சமந்தா, விக்னேஷ் சிவனை தொடர்ந்து பகத் பாசிலை பாராட்டிய நயன்தாரா

சென்னை,

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் பகத் பாசில். தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாளப் படம் 'ஆவேஷம்'. இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு, பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

கடந்த 11-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 19 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ரூ.127 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சமந்தா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன், ஆவேஷம் படத்தைப்பார்த்து பகத் பாசிலை பாராட்டியிருந்தனர். இந்நிலையில் அவர்களை தொடர்ந்து நடிகை நயன்தாராவும் பகத் பாசிலை பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் அந்த பதிவில், சூப்பர் ஸ்டார் பகத் பாசில். என்ன ஒரு வெறித்தனமான நடிப்பு. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். அருமை, அருமை மிகவும் அருமை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்