நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே குண்டுவெடிப்பால் பரபரப்பு

நடிகை சன்னி லியோன் கலந்து கொள்ள இருந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பால் பரபரப்பு தொற்றி கொண்டது.;

Update:2023-02-04 15:27 IST



இம்பால்,


இந்தி, தமிழ் உள்ளிட்ட திரை படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ள பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இவர், மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் ஹட்டா கேங்ஜெய்பங் பகுதியில் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள முடிவானது. இந்நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், பேஷன் ஷோ நடைபெறும் பகுதயில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இன்று காலை 6.30 மணி அளவில் திடீரென குண்டுவெடிப்பு நடந்து உள்ளது.

எனினும், இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அது சக்தி வாய்ந்த வெடிகுண்டு அல்லது எறிகுண்டு என எதனால் ஏற்பட்ட குண்டுவெடிப்பு என்பது பற்றி தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு எந்தவித பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

நடிகை சன்னி லியோன், கடந்த 2019-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனால் பங்கேற்க முடியவில்லை. அதனால் எர்ணாகுளம் மாவட்ட பகுதியை சேர்ந்த ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் லியோன் மீது வழக்கு போட்டுள்ளார்.

ரூ.39 லட்சம் பணம் பெற்று கொண்டு கொச்சி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை என்பது புகாராக உள்ளது. எனினும், இதற்கு லியோன், அவரது கணவர் வெய்பர் உள்ளிட்டோர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

நடிகை சன்னி லியோனுக்கு எதிரான இந்த வழக்கில், கேரள ஐகோர்ட்டு விசாரணை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்து நேற்று அதிரடி உத்தரவிட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்