நடிகர் ரஜினியுடனான நினைவுகளை பகிர்ந்த நடிகை மாளவிகா மோகனன்!

தமிழில் ரஜினியுடன் பேட்ட, விஜய் ஜோடியாக மாஸ்டர், தனுசுடன் மாறன் படங்களில் நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

Update: 2024-01-10 13:23 GMT

சென்னை,  

தமிழில் ரஜினியுடன் பேட்ட, விஜய் ஜோடியாக மாஸ்டர், தனுசுடன் மாறன் படங்களில் நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன். இவர் நடிகர் விக்ரமுடன் நடித்து முடித்துள்ள தங்கலான் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் பல இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு தமிழ் திரையுலகில் முதல் படமாக அமைந்தது கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'பேட்ட' திரைப்படம். இந்த படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் மாளவிகா மோகனன், நடிகர் ரஜினியுடனான தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அதில், ' பேட்ட படம்தான் என் முதல் தமிழ் படம். இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் ரஜினி சார்தான். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் கனவு. முதல் நாள் படப்பிடிப்பின்போது, அவர் உள்ளே வந்ததும் அனைவரும் அமைதியாகி விட்டனர். எனது முதல் காட்சியே அவருடன்தான் என்பதால், என்னிடம் நன்றாக பேசினார். அந்த நாள் மட்டுமின்றி படம் முழுவதும் என்னை அக்கறையாக பார்த்துக்கொண்டார். என்னுடைய நடிப்புக்காக முதல் முறையாக கை தட்டி பாராட்டியவர் அவர்தான். என்னை ஒரு பெரிய நடிகையாக வருவேன் என ஊக்கப்படுத்தினார்' என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்