பேட்மேன் படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் டாம் வில்கின்சன் காலமானார்...!
பேட்மேன் படத்தில் இவர் நடித்த கார்மின் பால்கன் என்ற வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.;
வாஷிங்டன்,
இரண்டு முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் வில்கின்சன் (வயது 75) நேற்று காலமானார்.
இவர் 1976ம் ஆண்டு வெளியான 'ஸ்முகா' என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பிரிஸ்ட், ரஷ் ஹவர், ஷேக்ஸ்பியர் இன் லவ், ரைட் வித் டெவில் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பேட்மேன் படத்தில் இவர் நடித்த கார்மின் பால்கன் என்ற வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இரண்டுமுறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர் 130க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மேலும் கோல்டன் குளோப், எம்மி விருதுகள் போன்ற பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். இவரின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.