ஜிம்மில் உடற்பயிற்சி செய்த நடிகர் மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம்

பிரபல தொலைக்காட்சி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்சி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Update: 2022-11-11 13:06 GMT

மும்பை,

பிரபல தொலைக்காட்சி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்சி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் உடனடியாக அவரை கோகிலாபென் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய சித்தாந்த் வீர் சூர்யவன்சி, 'குசும்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 'கசௌதி ஜிந்தகி கே', சுபியானா இஷ்க் மேரா, ஜித்தி தில் மானே நா மற்றும் வாரிஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

ஈரா சௌத்ரி என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்ட சித்தாந்த், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் கடந்த 2017-ம் ஆண்டு மாடல் அழகியான அலெசியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்சியின் திடீர் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்