தமிழ் திரையுலகம் இதுவரை பார்த்திராத கதைக்களம்.. விடுதலை படக்குழுவினரை நேரில் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்
விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த 31ம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை. விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், விடுதலை படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அதேடு, இயக்குநர் வெற்றிமாறனையும், நடிகர் சூரியையும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
விடுதலை படம் குறித்து நடிகர் ரஜினி, தன்னுடைய டுவீட்டரில் கூறியதாவது;
"விடுதலை.. இதுவரை தமிழ்த்திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்!
சூரியின் நடிப்பு- பிரமிப்பு. இளையராஜா- இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் - தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள்.
இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்".
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) April 8, 2023