நயன்தாராவின் 75-வது படத்தில் இணைந்த நடிகர் ஜெய்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெய்-நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.

Update: 2023-04-06 19:17 GMT

சென்னை,

அட்லீ இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான 'ராஜா ராணி' படத்தில் நயன்தாரா, ஜெய், ஆர்யா, நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெய்-நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகவுள்ள நயன்தாராவின் 75-வது படத்தில் ஜெய் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் ஜெய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக சிறப்பு போஸ்டர் வெளியிட்டு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்