படப்பிடிப்பில் விபத்து; நடிகர் டோவினோ தாமஸ் காயம்
படப்பிடிப்பின்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் நடிகர் டோவினோ தாமசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.;
பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் தனுசுடன் மாரி 2 படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மலையாளத்தில் வெளியான டோவினோ தாமஸ் படங்களை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
இவர் நடித்த 2018 படம் சில மாதங்களுக்கு முன்பு தமிழ், மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் திலகம் என்ற படத்தில் டோவினோ தாமஸ் நடித்து வருகிறார். படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பின்போது திடீர் விபத்து ஏற்பட்டு டோவினோ தாமசுக்கு பலத்த அடிபட்டது. காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு டோவினோ தாமசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. படப்பிடிப்பில் டோவினோ தாமஸ் காயம் அடைந்ததை அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.