விஜய்யுடன் ராஷ்மிகா டூயட் ஆட்டம்... சென்னையில் பிரமாண்ட செட்
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கியது.
படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில், சென்னை கோகுலம் ஸ்டூடியோஸில் படத்திற்காக பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளதாகவும், தற்போது ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.