தீபிகா படுகோனே ஆசைகள்
தீபிகா படுகோனே தனது ஆசைகள் மற்றும் பிடித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே தனது ஆசைகள் மற்றும் பிடித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘’காலம் ஒரு முறை பின்னோக்கி நகர்ந்தால் நன்றாக இருக்கும். அது மட்டும் நடந்து விட்டால் டைட்டானிக் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனக்கு அந்த சினிமா அவ்வளவு பிடித்திருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான், ஷாருக்கான், தெலுங்கில் மகேஷ்பாபு. எனக்கு மிகவும் பிடித்த நாடு மெக்சிகோ, அங்கு எத்தனை முறை சென்றாலும் நான் ஏற்கனவே பார்த்த இடங்கள் கூட எப்போதும் புதிதாகவே தெரியும். அதற்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த இடம் என் வீடு. எனக்கு பிடித்த உணவு ரசம் சாதம். தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ஆகியோருடன் சேர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது’’ என்றார்.