'மாமனிதன்' திரைப்படத்தை பாராட்டிய ரஜினி..!
மாமனிதன் திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்;
சென்னை,
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் ,நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை யுஎஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.
மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். எம். சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'மாமனிதன்' திரைப்படம் வருகிற மே மாதம் 20ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், மாமனிதன் திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியுள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
ஜனவரியில்#மாமனிதன் படம் பார்த்து
— R.Seenu Ramasamy (@seenuramasamy) March 26, 2022
பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை
அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள்
நீங்கள் படம் பார்த்ததே
ஆசிகள் அதுபோதும் என்றேன்.
இன்று வெளியீட்டு தேதி
தானாகவே விற்பனையாவும்
முடிந்தது சார்.
நன்றி @rajinikanth 🙏 pic.twitter.com/CbOTISyXTI