பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்
பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், தரமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி அவர் ஒப்புக்கொண்ட ஒரு புதிய படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
இது, ஒரு பெண்ணின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். அந்த வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருடன் லட்சுமி பிரியா, கருணாகரன், மைம்கோபி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
‘லாக்கப்’ படத்தை இயக்கிய சார்லஸ் டைரக்டு செய்கிறார். 2 பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.