‘துள்ளுவதோ இளமை’ நாயகி 15 வருடங்களுக்குப்பின் மீண்டும் செரீன்
‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானவர், செரீன். இவர், 15 வருட இடைவெளிக்குப்பின், மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார்.
படத்தின் பெயர், ‘ரஜினி.’ இந்தப் படத்தை ‘மகாபிரபு’, ‘சாக்லெட்’, ‘பகவதி’, ‘குத்து’, ‘ஏய்’, ‘மல மல’ ஆகிய படங்களை இயக்கிய ஏவெங்கடேஷ் டைரக்டு செய் கிறார். ‘‘முதலில் நடிக்க தயங்கிய செரீன், கதையை கேட்டதும் நடிக்க சம்மதித்தார்’’ என்று டைரக்டர் ஏ.வெங்கடேஷ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
‘‘இது, குடும்பப் பாசமும், அதிரடி சண்டை காட்சிகளும் நிறைந்த படம். ஒரு தீவிரமான ரஜினி ரசிகரை பற்றிய கதை. மாலை 6 மணிக்கு ஆரம்பித்து அதிகாலை 6 மணிக்கு முடியும் திகில் கதை. ரஜினிகாந்த் படத்தில் பேசிய ‘பஞ்ச்’ வசனங்களை அப்படியே வாழ்க்கையில் செயல்படுத்தி வருகிறான், கதாநாயகன். அந்த வகையில்தான் அவன் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறான்.
அதில் இருந்து அவன் எப்படி வெளியே வருகிறான்? என்பதே கதை. படத்தில், ‘‘தலைவா...தலைவா...’’ என்று ஒரு பாடல் இடம்பெறுகிறது. இசையமைப்பாளர் அம்ரீஷ் எழுதி இசையமைத்து இருக்கிறார். இந்தப் பாடலை ஒரு பிரபல பாடகரை வைத்து பாட வைக்க முடிவு செய்து இருக் கிறோம்.
‘நெல்’ படத்தில் நடித்த விஜய் சத்யா, ரஜினி ரசிகர் வேடத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் இமான் அண்ணாச்சி, வனிதா விஜயகுமார் ஆகிய இரு வரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை வி.பழனிவேல் தயாரிக் கிறார்.’’