மலையாள படத்தில் சூர்யா
இயக்குனர் அமல் நீரத் மலையாள படமொன்றில் சூர்யா நடிக்க முடிவு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் பிறமொழி படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். விஜய் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குகிறார்.
இதுபோல் தனுஷ் வாத்தி என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனும் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இவர்கள் நடிக்கும் தெலுங்கு படங்களை தமிழிலும் வெளியிட உள்ளனர்.
இந்த நிலையில் சூர்யா நேரடி மலையாள படமொன்றில் நடிக்க முடிவு செய்துள்ளார். சூர்யாவுக்கு கேரளாவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் கேரளாவில் நன்றாக ஓடி வசூல் குவிக்கின்றன. எதற்கும் துணிந்தவன் படமும் கேரளாவில் வெளியாகிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க சூர்யா கேரளா சென்று இருந்தார்.
அந்த விழாவில் சூர்யா பங்கேற்று பேசும்போது, பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத் என்னிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறார். அவரது படத்தில் நான் நடிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார். இதையடுத்து சூர்யா நேரடி மலையாள படத்தில் நடிக்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.