தனுஷ் படத்தின் வில்லன் நடிகர் ஹீரோவானார் - படத்தின் டைட்டில் வெளியீடு..!

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரின் புதிய படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.

Update: 2022-03-05 17:52 GMT
சென்னை,

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அமிதாஷ் பிரதான் தற்போது இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை காஷ்மிரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகர் சரத்குமார், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு 'பரம்பொருள்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

பரம்பொருள் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். எஸ். பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். கவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

மேலும் செய்திகள்