யூ டியூப்பில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்த சந்தானத்தின் பாடல்

சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தின் பாடல் ஒன்று 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.;

Update:2022-03-01 00:25 IST
சென்னை,

திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாக வளர்ந்தவர் சந்தானம். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் டிக்கிலோனா. டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது தந்தை இளையராஜா இசையமைத்து இருந்த பேர் வச்சாலும் என்ற பாடலை ரீமேக் செய்து தனது ஸ்டைலில் உருவாக்கியிருந்தார். இந்த பாடலானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன், படம் வெளியான சமயத்தில் இந்த பாடலானது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், இந்த பாடலானது யூ டியூப்பில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. 

மேலும் செய்திகள்