நகுல் நடிக்கும் 'வாஸ்கோட காமா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் நகுல் நடிக்கும் 'வாஸ்கோட காமா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2022-02-14 18:33 GMT
சென்னை,

நடிகர் நகுல் தற்போது 'வாஸ்கோட காமா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், முனீஸ்காந்த் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வாஸ்கோட காமா திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர நகுல், படம் 2022 தீபாவளி அன்று வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

வாஸ்கோட காமா திரைப்படத்திற்கு அருண் இசையமைக்கிறார். வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்கிறார். 

மேலும் செய்திகள்