விஷ்ணு விஷால் நடிக்கும் 'எப்.ஐ.ஆர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் 'எப்.ஐ.ஆர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2022-02-01 01:40 IST
சென்னை,

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'எப்.ஐ.ஆர்'. மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ரைசா வில்சன், ரேபா மோனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 11-ந்தேதி 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக முதலில் ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளது.

விஷ்ணு விஷால் தன்னுடைய சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்த திரைப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எப்.ஐ.ஆர் திரைப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். 'கிருமி' புகழ் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்