புதுவை முதல்வருடன் நடிகர் சந்தானம் சந்திப்பு..!

புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமியை சந்தித்து நடிகர் சந்தானம் வாழ்த்து பெற்றார்.;

Update:2021-12-17 19:36 IST
புதுச்சேரி,

நடிகர் சந்தானம் அடுத்ததாக புதுச்சேரியை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிக்கிறார். இன்று அந்த படத்திற்கான பூஜை புதுச்சேரியில் போடப்பட்டது. 

இதையடுத்து நடிகர் சந்தானம் புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமியை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து சந்தானம் கூறுகையில், படப்பிடிப்பு வரியை குறைக்க வேண்டுமென்றும் சில இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டுமென்றும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்