4 கதாநாயகிகளுடன் ஒரு திகில் படம்

4 கதாநாயகிகள் நடிக்கும் ஒரு திகில் படம் விரைவில் தொடங்க இருக்கிறது என டைரக்டர் கிரிதரன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-14 11:59 GMT
சாய் தன்சிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜனனி, சந்திரலேகா ஆகிய 4 பேர்களும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

இதில் ஜான் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். கிரிதரன் டைரக்டராக அறிமுகமாகிறார்.

“இது, ஒரு திகில் படம். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது” என்றார், டைரக்டர் கிரிதரன். இந்தப் படத்தை எம்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்