மக்களோடு மக்களாக சென்று திருப்பதியில் நடிகை சமந்தா சாமி கும்பிட்டார்
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடிகை சமந்தா ரூ.300 கட்டணத்திலேயே மக்களோடு மக்களாக சாமி தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்-தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘யசோதா’ மற்றும் 2 தெலுங்கு படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். அந்த பாடலும் தற்போது ஹிட் ஆகியுள்ளது.இந்தநிலையில் நடிகை சமந்தா ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். பொதுவாகவே திருப்பதிக்கு பிரபலங்கள் வரும்போது வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று சாமி கும்பிட்டு செல்வார்கள்.
ஆனால் நடிகை சமந்தா ரூ.300 கட்டணத்திலேயே மக்களோடு மக்களாக திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சாமி தரிசனம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வந்த சமந்தாவுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெரிய வேண்டுதலை மனதில் நினைத்துக்கொண்டு சமந்தா திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும் பேசப்படுகிறது.