விஜய் படத்தில் பிரகாஷ்ராஜ்

12 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் இடம் பெற்றுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update:2022-05-24 14:52 IST

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நாயகியாக ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இந்த படத்தில் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோரும் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர். ஏற்கனவே கில்லி, போக்கிரி உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்து இருந்தார். கடைசியாக 2009-ல் வெளியான வில்லு படத்தில் இணைந்து நடித்து இருந்தனர்.

12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் பிரகாஷ்ராஜ் நடிப்பதால் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் விஜய்யின் சகோதரராக பிரகாஷ்ராஜ் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஐதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். விஜய்யுடன் இணைந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், ஹாய் செல்லம் நாங்கள் மீண்டும் வந்து விட்டோம் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்