கடைக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
குன்னூர் அருகே கடைக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.;
குன்னூர்
குன்னூர் அருகே உள்ள மோர்ஸ் கார்டனில் டயர் கடைசெயல்பட்டு வருகிறது. இந்த கடையில் டயர்கள் அடுக்கி வைத்திருந்தனர். இந்த டயர்களுக்கு இடையே பாம்பு ஒன்று இருந்தது. இதுகுறித்து கடை ஊழியர்கள் குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு ஊழியர்கள் பாம்பை பிடித்தனர். பிடிபட்ட பாம்பு 4 அடி நீளம் கொண்ட கட்டு விரியன் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பை தீயணைப்பு துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.