சாலை வசதி, வடிகால் வசதி, சுகாதார நிலையம் வார்டு வாரியாக வாக்குறுதி கொடுத்து என்.ஆர். தனபாலன் தீவிர பிரசாரம்

பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரும், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் பெரம்பூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.;

Update:2021-04-03 08:29 IST
சென்னை,

உடற்பயிற்சி கூடம், பூங்காவில் நடைபயிற்சி செல்பவர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரிடம் ஓட்டு கேட்டார். பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்ப்பதாகவும், 34-வது வார்டு, 35-வது வார்டு, 36-வது வார்டு, 37-வது வார்டு, 44-வது வார்டு, 45-வது வார்டு, 46-வது வார்டு என வார்டு வாரியாக அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி கொடுத்து ஓட்டு சேகரித்தார். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவுவார் என்.ஆர்.தனபாலன் சிறந்த மனிதர் அவருக்கு வாக்களியுங்கள் பெரம்பூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்:

பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர். தனபாலனுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். பெரம்பூர் தொகுதி முல்லை நகர் ஜங்ஷனில் நடந்த பிரசார கூட்டத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் என்.ஆர்.தனபாலன் மிகவும் அன்பானவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவக்கூடியவர். அவரை நம்பி நீங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள். அவர் சிறந்த மனிதர்.

அ.தி.மு.க. தான் ஜனநாயக முறையில் ஆட்சி நடத்துகிறது. இங்கு வாரிசு அரசியல் கிடையாது. சாதாரண தொண்டர் கூட அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் ஆகலாம். நான் தொண்டனாக இருந்து தான் முதல்-அமைச்சர் ஆகியுள்ளேன். இங்குள்ள ஒவ்வொரு மக்களும் கூட முதலமைச்சர் ஆகலாம். அண்ணன் என்.ஆர். தனபாலன் கூட் முதல்வர் ஆகலாம். முதல்வர் ஆகும் தகுதி ஒவ்வொரு சாதாரண மக்களுக்கு இருக்கிறது.

எனக்கு தொண்டை வலி ஆனாலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக பேசுகிறேன். தினமும் 40 கூட்டங்களில் பேசுவதால் தொண்டை வலி இருக்கத்தான் செய்யும். முதல்வர் ஆவது ஸ்டாலின் கனவு அந்த கனவு கனவாகவே போகும். என்.ஆர்.தனபாலனை வெற்றிபெறச் செய்ய இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மேலும் செய்திகள்