தூத்துக்குடி மாநகராட்சியுடன் அய்யனடைப்பு பகுதியை இணைக்க வேண்டாம் கலெக்டரிடம் மனு
தூத்துக்குடி மாநகராட்சியுடன் அய்யனடைப்பு பகுதியை இணைக்க வேண்டாம் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
அப்போது விளாத்திகுளம் தாலுகா பனையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த பள்ளிக்கு பின்புறத்தில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அய்யனடைப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் ஆதிதிராவிட மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். நாங்கள் கூலி தொழிலே செய்து வருகிறோம். தற்போது எங்கள் பகுதியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க போவதாக கூறப்படுகிறது. அவ்வாறு இணைத்தால், இதுவரை எங்களுக்கு கிடைத்து வந்த எந்த அரசு சலுகையும் கிடைக்காது. எனவே எங்கள் பகுதியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று கூறி இருந்தனர்.
கோரம்பள்ளம் குளம் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரபூபதி கொடுத்த மனுவில், தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம், அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம் போன்ற பகுதிகளில் விவசாயத்துக்கு கோரம்பள்ளம் குளம், பெட்டை குளம் உதவியாக இருந்து வருகிறது. இந்த குளங்கள் தற்போது தண்ணீர் இல்லாமல் உள்ளது. அணையில் இருந்து பலமுறை தண்ணீர் திறந்தும், இந்த குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. ஆனால் தூத்துக்குடியில் மட்டும் பெய்யவில்லை. இங்குள்ள தனியார் தொழிற்சாலைகளே இதற்கு காரணம். எனவே தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளை உடனடியாக மூட வேண்டும் என்று கூறி இருந்தார்.
ஸ்ரீவைகுண்டம் தாலுகா தெய்வச்செயல்புரம் பகுதியை சேர்ந்த பரமசிவன் மற்றும் சிலர் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி வடிநில உப கோட்டத்துக்கு உட்பட்ட கோரம்பள்ளம், பேய்குளம், பெட்டைகுளம் ஆகிய குளங்களை தரம் உயர்த்தி நீர் தேக்கமாக மாற்றுதல், திட்ட பணிகள் மேற்கொள்ளுதல், பூங்கா அமைத்தல், பாசன உதவியாளர் குடியிருப்பு ஆகிய பணிகள் மேற்கொள்வதாக கூறி, ரூ.16.31 கோடி ஊழல் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை வாரியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
திருச்செந்தூர் தாலுகா மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் 2016-17-ம் கல்வி ஆண்டில் மெஞ்ஞானபுரம் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து, தேர்ச்சி பெற்று தற்போது மேல்படிப்பு படித்து வருகிறோம். நாங்கள் படித்த பள்ளியில் அரசு வழங்கும் இலவச மடிக்கணினி எங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. எங்களுக்கு அரசின் இலவச மடிக்கணினி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
ஓட்டப்பிடாரம் கவர்னகிரி பகுதி மக்கள் கொடுத்த மனுவில், ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட கவர்னகிரி கிராம ஊராட்சியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், அரசின் திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்து வருகிறார். ஊராட்சியில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சமுதாய சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், மீனவளத்துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, கூடுதல் நீளம் இருந்தால் அதை குறைக்க வேண்டும். அதிக திறன் கொண்ட எந்திரங்களையும், சீன எந்திரங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும். விசைப்படகுகள் காலை 5 மணிக்கு கடலுக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்ப வேண்டும். கரையில் இருந்து 5 கடல் மைல்களுக்கு அப்பால் தான் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.