கிருஷ்ணகிரியில் மாதாந்திர விளையாட்டு போட்டி 561 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவின்;

Update:2017-03-29 03:45 IST
கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவின் சார்பில் மார்ச் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. தடகளம், நீச்சல், கோ-கோ, ஆக்கி ஆகிய விளையாட்டு போட்டிகளில் வயது வரம்பின்றி அனைத்து வயது பிரிவினருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது.

ஆண்களுக்கான போட்டியில் 316 பேரும், பெண்களுக்கான போட்டியில் 245 பேரும் என மொத்தம் 561 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

தடகளம் மற்றும் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும், கோ-கோ மற்றும் ஆக்கி போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணி வீரர், வீராங்கனைகளுக்கும் பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமையில் பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்