வங்கியில் கடன் பெற்று ரூ.8 லட்சம் மோசடி; தம்பதியினர் மீது வழக்கு

மதுரை மேலமாசி வீதியை சேர்ந்தவர் முரளிபாபு.;

Update:2017-03-01 04:00 IST

மதுரை,

மதுரை மேலமாசி வீதியை சேர்ந்தவர் முரளிபாபு. இவரது மனைவி மோகனா. இவர்கள் 2 பேரும் அவனியாபுரத்தில் உள்ள அரசு வங்கி கிளையில் தனது இடத்தின் ஆவணத்தை காண்பித்து வீடு கட்ட 8 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர். இந்தநிலையில் வங்கி அதிகாரிகள் ஆய்வு சென்றபோது அந்த இடத்தை முரளிபாபு வேறு ஒருவருக்கு விற்பனை செய்து இருப்பதும், அதை மறைத்து வங்கியில் கடன் வாங்கியதும் தெரியவந்தது.

இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் தண்டபாணி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் முரளிபாபு, அவரது மனைவி மோகனா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்