< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்

அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை: அதிபர் பைடன் பேச்சு

தினத்தந்தி
|
20 Aug 2024 1:30 AM GMT

அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொடங்கியுள்ள ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாட்டில் அதிபர் பைடன் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

நியூயார்க்,

Live Updates

  • 20 Aug 2024 6:29 AM GMT

    தோல்வியடைந்த நாடு என அமெரிக்காவை டிரம்ப் கூறினார். பொதுவெளியில் அவர் கூறியிருக்கிறார். உலகத்திற்கு அவர் அனுப்பிய செய்தியை நினைத்து பாருங்கள். அவர் தோல்வி அடைந்தவர் என்று கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் முன் பைடன் பேசியுள்ளார்.

  • 20 Aug 2024 5:50 AM GMT

    ஜோ பைடன் பேச வந்ததும், கூட்டத்தினர் அவரை வரவேற்கும் வகையில் கோஷம் எழுப்பினர். அப்போது பைடன், அமெரிக்காவை நான் நேசிக்கிறேன் என்று கூறினார். அப்போது அவர் கண் கலங்கியபடி பேசினார்.

            

  • 20 Aug 2024 5:42 AM GMT

    பைடனும், நானும் கமலா ஹாரிசை நன்றாக அறிவோம். அவருடைய தைரியம் மற்றும் தலைமைத்துவ திறன்கள் ஆகியவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்று அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் பேசினார்.

  • 20 Aug 2024 4:27 AM GMT

    குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப், தன்னை பற்றி மட்டுமே சிந்திப்பவர் என ஹிலாரி கடுமையாக சாடினார். கமலா ஹாரிசை இரக்கமற்ற முறையில் கிண்டல் செய்ததற்காகவும் அவரை ஹிலாரி கடிந்து கொண்டார்.

  • 20 Aug 2024 3:31 AM GMT

    அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு துறை மந்திரியான ஹிலாரி கிளிண்டன் மாநாட்டில் பேசும்போது, ஜோ பைடன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஜனநாயகத்தின் சாம்பியன் என்றார்.

    வெள்ளை மாளிகைக்கு மீண்டும் கண்ணியம் வந்துசேர பாடுபட்டவர் மற்றும் உண்மையான தேசப்பற்று என்றால் என்ன? என வெளிப்படுத்தியவர் என்று பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.

  • 20 Aug 2024 3:02 AM GMT

    அமெரிக்க கூடைப்பந்து பயிற்சியாளர் ஸ்டீவ் கெர், இந்நிகழ்ச்சியில் கமலா ஹாரிசுக்கு தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தினார்.

  • 20 Aug 2024 2:32 AM GMT

    காசாவில் இஸ்ரேல் நடத்தும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கானோரில் சிலர் இந்த மாநாட்டுக்குள் அத்துமீறி புகுந்தனர்.

  • 20 Aug 2024 2:20 AM GMT

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த சூழலில், ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார்.

    எனினும், வயது முதிர்வு, உடல்நல பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர் போட்டியில் இருந்து விலகும் முடிவை வெளியிட்டார். இதேபோன்று, கட்சிக்குள்ளே இருந்தும் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. டிரம்புடனான நேரடி விவாதத்தில் எழுந்த சர்ச்சை, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தவறுதலாக அவர் கூறிய விசயங்கள் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில், கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக பைடன் அறிவித்து, அவருக்கான ஆதரவையும் வழங்கினார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாடு தொடங்கியுள்ளது. இதனை காண்பதற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிசுக்கு முறைப்படி ஆதரவு தெரிவிக்கப்படும். இதன்படி, மாநாட்டில் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்படுவார். இதனை அவர் ஏற்று கொள்கிறார்.

    இதேபோன்று, துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மின்னசோட்டா கவர்னர் டிம் வால்சும் முறைப்படி வேட்பாளராக இந்த மாநாட்டில் அறிவிக்கப்படுவார்.

    அமெரிக்க அதிபர் போட்டியில் இருந்து கடந்த மாதம் விலகிய அதிபர் ஜோ பைடன் இந்த மாநாட்டில் பங்கேற்று பேசுவார். அவருடன் கமலா ஹாரிசும் மேடையில் தோன்றுவார் என கூறப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர்களான பாரக் ஒபாமா மற்றும் பில் கிளிண்டன் உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்து கொண்டு பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.

மேலும் செய்திகள்