ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழா கோலாகலம்: பிரபலங்கள் பங்கேற்பு
|முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியை ஒட்டி மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மும்பை,
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்று வருகிறது. திருமண நிகழ்ச்சியை ஒட்டி மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தநிலையில், அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.
Live Updates
- 13 July 2024 12:13 AM IST
திருமண விழாவில் மனைவி சாக்ஷி மற்றும் மகளுடன் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் டோனி
- 12 July 2024 11:55 PM IST
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு குடும்பத்துடன் கலந்துகொண்டார்
- 12 July 2024 9:56 PM IST
ஆனந்த்-ராதிகா திருமணம்: சிவப்பு இளஞ்சிவப்பு நிற சேலையில் பிரகாசமாக ஜொலித்த வித்யா பாலன்...
- 12 July 2024 9:53 PM IST
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இன்று மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் , இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி , இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா , பும்ரா , நடிகர் ரஜினி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் , சல்மான் கான் , நடிகை பிரியங்கா சோப்ரா , இயக்குனர் அட்லீ, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- 12 July 2024 9:52 PM IST
மும்பையில் நடந்த ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவிற்கு பாலிவுட் பிரபலங்கள் ஷாகித் கபூர், மீரா ராஜ்புத், கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
- 12 July 2024 9:45 PM IST
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக குஜராத் முதல்-மந்திரி பூபேந்திரபாய் படேல் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.
- 12 July 2024 9:41 PM IST
பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளெய்ர் தனது மனைவியுடன் மும்பையிலுள்ள ஜியோ உலக மையத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
- 12 July 2024 9:34 PM IST
ஆனந்த்-ராதிகா திருமண விழாவில் பட்டு வேட்டி சட்டையில் நடனமாடிய ரஜினிகாந்த்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இன்று மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திரை நட்சத்திரங்களும் வருகை தந்துள்ளனர். அதில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தாரோடு கலந்து கொண்டார். ரஜினியுடன் அவரது இளையமகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், அவரின் கணவர் விசாகன் மற்றும் மகன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரஜினிகாந்த் மணமகன் அழைப்பின் போது டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது.