10ம் நாளாக தொடரும் போர்: ஹமாஸ் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும் - ஜோ பைடன்
|இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 10ம் நாளாக நீடித்து வருகிறது.
ஜெருசலேம்,
Live Updates
- 16 Oct 2023 8:06 PM IST
டெல் அவிவ், ஜெருசலேம் நகரில் சைரன்கள் ஒலித்ததால் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
- 16 Oct 2023 7:34 PM IST
போருக்கு முன், போருக்கு பின் - இஸ்ரேல் வெளியிட்ட புகைப்படம்..!
இஸ்ரேல் மீது காசா நடத்திய முதல்நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் ஏற்பட்ட சேதங்கள், போருக்கு முன் போருக்குப் பின் என இரு படங்களாக இஸ்ரேல் - வெளியிட்டுள்ளது. போருக்கு முன்பு (அக்.6) இருப்பதை விட, காசா தாக்குதல் நடத்திய அக்.7ஆம் தேதி மிகுந்த சேதங்களை இஸ்ரேல் சந்தித்துள்ளது. செயற்கைக்கோள் மூலம் இப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
- 16 Oct 2023 7:13 PM IST
இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் காசா பகுதியில் வசிக்கும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாகப் பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும். 10,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காசா மருத்துவமனைகளில் ஏற்கனவே சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் கருவிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே காயமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு மிகவும் சிக்கலான ஒரு சூழல் உருவாகியுள்ளது.
- 16 Oct 2023 6:17 PM IST
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 41 நாடுகளை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு மற்றும் மாயமானதாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், 105 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 103 பேர் மாயமாகியுள்ளனர் என்றும் இது ஹமாஸூக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் மட்டுமல்ல, இது உலகளாவிய போர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 16 Oct 2023 5:49 PM IST
பிலிப்பைன்சில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், காசா பகுதியில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்தும் பிலிப்பைன்சில் 25,000 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 16 Oct 2023 4:19 PM IST
இஸ்ரேலின் டெல் அவிவ் நகர்மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது. ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து எழுந்த மிகப்பெரும் சப்தத்தால் டெல் அவிவ் நகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
- 16 Oct 2023 4:08 PM IST
இஸ்ரேலியப் படைகள், ஆக்கிரமிக்கப்பட்ட காசா மேற்கு பகுதியில் 2 பத்திரிகையாளர்கள் உள்பட 70 பேரை இரவோடு இரவாக கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 16 Oct 2023 3:59 PM IST
இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து ரபா எல்லையை திறப்பதை எகிப்து நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் அதனை அனுமதிக்கவில்லை என்று எகிப்தின் நிதி மந்திரி சமே ஷோக்ரி கூறியுள்ளார்.
- 16 Oct 2023 3:47 PM IST
இஸ்ரேலியர்கள் 199 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. முன்னதாக 155 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரிடம் பிடிபட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசிய பிறகு தற்போது எண்ணிக்கையை உயர்த்தி அறிவித்துள்ளது.