சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை


சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை
x

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

கிழக்கு இலங்கை கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்னை சென்டிரல், புரசைவாக்கம், வேளச்சேரி, கிண்டி, மேடவாக்கம், அசோக் நகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


Next Story