சென்னை
இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-01-2025
|உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Jan 2025 4:41 PM IST
துபாய் ரேஸில் இருந்து அஜித் விலகல்
துபாய் ரேஸில் அஜித் கார் ஓட்டப்போவது இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. ரேஸில் அஜித் குமாரின் அணி தொடர்ந்து போட்டியிடும் எனவும் அணியின் வெற்றி வாய்ப்பு, அஜித்தின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அஜித் கார் அணி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- 11 Jan 2025 4:05 PM IST
ஜனவரியிலேயே ரிலீஸ் ஆகிறதா விடாமுயற்சி?
தனது ஒரு படம் ஜனவரியிலும் இன்னொரு படம் ஏப்ரல் அல்லது மே மாதத்திலும் ரிலீஸ் ஆக இருப்பதாக கார் ரேஸ் களத்தில் இருந்து நடிகர் அஜித் தகவல்.
பொங்கல் அன்று ரிலீஸ் ஆகாத விடாமுயற்சி ஜனவரி கடைசியில் வெளியாக வாய்ப்பா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
- 11 Jan 2025 3:26 PM IST
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
- 11 Jan 2025 2:58 PM IST
போட்டியை பார்க்க எனது ரசிகர்கள் இவ்வளவு பேர் வருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. ரசிகர்களில் அன்பு அளப்பறியது - கார் பந்தய களத்தில் இருந்து நடிகர் அஜித் பேட்டி
- 11 Jan 2025 2:03 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சமீபத்தில் மரணம் அடைந்ததும், அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் 5-ந்தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் அக்கட்சியில் கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ளார்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வாழ்த்து பெற்றார்.
- 11 Jan 2025 1:44 PM IST
உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் தமிழர்கள் முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.