ஆசிய விளையாட்டு: குதிரையேற்றத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா....!
|குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
Live Updates
- 26 Sept 2023 8:34 PM IST
குத்துச்சண்டை
குத்துச்சண்டை ஆண்கள் 92 கிலோ எடை ரவுண்ட் ஆப் 16 பிரிவில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இந்த்ய வீரர் நரேந்தர் வெற்றிபெற்றார்.
- 26 Sept 2023 8:23 PM IST
வுஷூ
வுஷூ ஆண்கள் 70 கிலோ காலிறுதி சுற்றில் ஆப்கானிஸ்தான் வீரரிடம் இந்திய வீரர் சுராஜ் தோல்வியடைந்தார்.
- 26 Sept 2023 7:21 PM IST
வுஷூ:
வுஷூ ஆண்கள் 60 கிலோ காலிறுதி சுற்றில் தென்கொரிய வீரரிடம் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் சூர்ய பனு பிரதாப் சிங் தோல்வியடைந்தார்
- 26 Sept 2023 6:58 PM IST
நீச்சல்:
நீச்சல் ஆண்கள் 4 X 100 மீட்டர் மெட்லே ரிலே இறுதிப்போட்டியில் இந்திய அணி 5ம் இடம் பிடித்தது. இதன் மூலம் பதக்க வாய்ப்பை இந்தியா இழந்தது. இப்போட்டியில் முதலிடம் பிடித்த சீன அணி தங்கப்பதக்கம் வென்றது.
- 26 Sept 2023 6:34 PM IST
ஸ்குவாஷ்:
ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவு ஏ, போட்டி 17ல் இந்தியா - கத்தார் அணிகள் மோதின. இப்போட்டியில் கத்தாரை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது. நாளை நடைபெற உள்ள அடுத்த சுற்றில் இந்திய அணி குவைத்தை எதிர்கொள்ள உள்ளது.
- 26 Sept 2023 6:13 PM IST
நீச்சல்
நீச்சல் ஆண்கள் 1500 மீடர் பிரிஸ்டைல் பாஸ்ட் ஹீட் இறுதி சுற்றில் இந்திய வீரர்கள் ஆரியன் 7ம் இடத்தையும், ராவத் 8ம் இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியில் சீன வீரர் தங்கப்பதக்கம் வென்றார்.
- 26 Sept 2023 5:53 PM IST
வாலிபால்:
வாலிபால் போட்டியில் 5வது மற்றும் 6வது இடத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 0-3 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 5ம் இடம் பிடித்தது. அதேவேளை தோல்வியடைந்த இந்தியா பட்டியலில் 6ம் இடம் பிடித்தது.
- 26 Sept 2023 5:38 PM IST
டென்னிஸ்:
டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ரவுண்ட் 2 போட்டி 1-ல் இந்தியா - பாகிஸ்தான் மோதின. இப்போட்டியில் பாகிஸ்தான் ஜோடியை 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்திய ஜோடி அங்கிதா ரவிந்திரகிருஷ்ணன், யொகி வெற்றிபெற்றனர்.
- 26 Sept 2023 5:04 PM IST
ஜூடோ: வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா தோல்வி
ஜூடோ பெண்கள் 78 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீராங்கனை துலிகா மென் மங்கோலிய வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
- 26 Sept 2023 4:28 PM IST
டென்னிஸ்:
டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் ரவுண்ட் 3 போட்டி 2ல் கஜகஸ்தான் வீரரை 7-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி இந்திய வீரர் சுமித் நகல் வெற்றிபெற்றார்.